சீன அரசு, 5ஜி சேவையை தொடங்க அரசுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
சீனாவில் 5ஜி சேவைக்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சியானது, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மியா வெய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சீனா டெலிகாம், சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்கு, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது.
இந்த 5ஜி தொழில்நுட்பத்தில் 4ஜி தொழில்நுட்பத்தின் பதிவிறக்க வேகத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.