tamilnadu

img

உலகைச் சுற்றி... (ஒருவரியில் உலகச் செய்திகள்)

சீனாவின் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்து விட்டார் டொனால்டு டிரம்ப். ஜனாதிபதி தேர்தலில் தனது எதிரியான ஜோ பிடேனை வெற்றிபெறச் செய்வதற்காக, தனக்கு எதிராக ஏராளமான பொய்த்தகவல்களை சீனா பரப்பிவருவதாக டிரம்ப் புலம்பியிருக்கிறார்.

கோவிட் 19 பரவலின் உச்சக்கட்டத்திலிருந்து இத்தாலி படிப்படியாக வெளியே வந்துவிட்டது என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல நீக்கப்படும் என்றும் நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குவதாகவும் அந்நாட்டின் பிரதமர் குயூஸ்செப் கோன்டே தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கான நிதி உதவியை,அராஜகமான முறையில் டிரம்ப் நிர்வாகம்நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில் புதிய நிதிஆதாரங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின்இயக்குநர் டெட்ரோஸ் அதனோன்தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒசாகா, கியுட்டோ மற்றும் கியோகோ ஆகிய முக்கிய மூன்று நகரங்களில் கொரோனாபாதிப்பு எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சி அடைந் துள்ள நிலையில், அந்த நகரங்களில் அவசர நிலைதளர்த்தப்படுவதாக பிரதமர் சின்சோ அபே தெரிவித் துள்ளார். தலைநகர் டோக்கியோவில் அடுத்த வாரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

கொரோனா பாதிப்பின் கோரப் பிடியில் இருந்து திட்டமிட்ட முறையில் மீண்டு வந்த மக்கள் சீனத்தின் வருடாந்திர மக்கள் அரசியல் ஆலோசனை கவுன்சில் மாநாடு துவங்கியிருக்கிறது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நாடு முழுவதுமிருந்து பங்கேற்றியிருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்முன்மொழிந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மலேரியா மருந்து, இன்னும் கொரோனாவுக்கு உரிய மருந்தாக கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 544 மசூதிகள் உள்ளன. இங்கு உரிய சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பார்வையாளர்களுக்கும் தொழுகை நடத்தவும் திறந்துவிடப்படும் என மாகாண அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா புதிய யோசனையை முன்வைத்திருக்கிறார். நியூசிலாந்தின் பிரதான வருவாய் தொழிலாக இருக்கும் சுற்றுலாவை மேம்படுத்த, வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்குமாறு தொழில் நிறுவன முதலாளிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 1.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணம் 8 என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. பாதிக்கப் பட்டவர்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுகாதாரப் பணியாளர்கள் என்று ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் நோக் கத்துடன் சீனா நடவடிக்கை மேற்கொண்டி ருக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அலைஸ் வெல்ஸ் என்ற தூதர் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு ஆதாரம் இல்லை என்றும், முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்திய - சீன எல்லையில் அமைதியையும் நிலைத்தன்மையை யும் உறுதிப்படுத்துவதில் இரு தரப்புமே உறுதியாக இருக்கிறோம் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனாவால் உலகப்பொருளாதாரம் கடுமையான பாதிப்பில் ஆழ்ந் திருக்கிறது. பிரிட்டனில் ஏப்ரல் மாதம் அந்நாட்டு அரசுஇதுவரை இல்லாத அளவிற்கு கடன் வாங்கியிருப்பதாகவும் உள்நாட்டில் சில்லரை விற்பனை 18சதவீதம் அளவிற்கு கடுமையான வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

சீனாவில் கொரோனா பாதிப்பிலிருந்து பொரு ளாதார நடவடிக்கைகள் மெல்ல மெல்ல வேகம் பிடிக்க துவங்கியிருப்பது தெரியவருகிறது. உள்நாட்டில் கார் விற்பனை, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா விவகாரத்தில் சீனாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்த தான் எடுத்த முயற்சிகளில் படுதோல்வி அடைந்துள்ள டொனால்டு டிரம்ப், தற்போது ஹாங்காங் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். ஹாங்காங்கில் சீனஅரசு உத்தேசித்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமலானால் அமெரிக்கா கடுமையான முறையில்பதிலடி கொடுக்கும் என மூக்கை நுழைத்திருக்கிறார்.

கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருக்க, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முன்தயாரிப்பு பிரச்சாரத்தில் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். இதன் பொருட்டு, போர்டு மோட்டார் கம்பெனியின் ஆலைக்குச்சென்றார். அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க,நான் அணியமாட்டேன் என்று ஆணவத்துடன் பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.