தொடரும் விபத்து: அச்சத்தில் சீனிவாசபுரம் மக்கள்
கணக்கெடுப்பு முடிந்தும் புதிய குடியிருப்பு கட்ட தாமதம் ஏன்? சிபிஎம்
சென்னை, மே 20 - சீனிவாசபுரத்தில் புதிய குடியிருப்பு கட்டுவதற்கு கணக்கெடுப்பு முடிந்த பிறகும் பணிகளை தொடங் காமல் காலதாமதம் செய் வது ஏன்? என்று சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது. மயிலாப்பூர் தொகுதிக் குட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்பு உள்ளது. 1965 - 1977 காலகட்டத்தில் காமராஜர், கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1356 குடியிருப்புகள் கட்டப்பட் டன. 2 அடுக்கு மாடி கட்டி டம் 31 பிளாக்குகளும், 4 அடுக்குமாடி கட்டிடங்களாக 30 பிளாக்குகளும் உள்ளன. இந்தப் பகுதி யில் மீனவர்கள், இதர பகுதி மக்கள் என 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரு கின்றனர். 2004 சுனாமி ஏற்பட்டத்தி லிருந்தே வாரிய வீடுகளை இடித்துவிட்டு, புதிய குடி யிருப்புகளை கட்டித்தர வேண்டும் என்று அங்குள்ள மக்கள் போராடி வருகின்ற னர். இருப்பினும் அரசு நிர்வாகம் கண்டுகொள்ளா மல் உள்ளது. இங்குள்ள வாரிய குடி யிருப்புகள் உப்புக்காற்றா லும், கடல் அரிப்பாலும் பாதிக்கப்பட்டு எலும்பு கூடு போல் உள்ளன. வீட்டின் சுவர்களை தொட்டாலே உதிர்ந்து விழுகின்றன. அவ்வப்போது படிக்கட் டுகள், ஜன்னல்கள், சன்ஷேடு, மேல்தளம், சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக கான்கீரிட்டுகளுக்குள் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த கம்பி களும் உப்புக் காற்றால் அரிக் கப்பட்டு கரைந்து கொண்டு ள்ளன. வீடு இடிந்து விழு வது தொடர்கதையாக இருப் பதால் மக்கள் மரண பயத்தி லேயே உள்ளனர். இந்த சூழலில், கடந் தாண்டு டிசம்பர் 4ந் தேதி 134 வது பிளாக்கில் வசித்து வந்த சையது குலாம் (வயது 23) என்ற இளைஞர் 4வது மாடியின் பால்கனி இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். டிச.5ஆம் தேதி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில்ஈடுபட்ட நிலையில்,அவரது குடும் பத்திற்கு அரசு நிவாரணம் அறிவித்தது. மேலும், உடனடியாக குடி யிருப்பாளர்கள் கணக்கீடு எடுக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. இதனையடுத்து டிச.9ந் தேதி தொடங்கி வாரிய குடியிருப்பு, கடற்கரையோர வீடுகள், முகத்துவாரத்தில் உள்ள வீடுகள், குடிசைகள் என முழுமையாக கணக் கெடுப்பு செய்யப்பட்டது. அந்தப் பகுதிகளில் உள்ள 2500 குடும்பங்களையும் புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட அடையாளப் படுத்தும் பணிகள் செய்யப் பட்டது. அதன் பிறகும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், மே 18 அன்று இரவு 163வது பிளாக் கில், 3வது மாடியின் சீலிங் மற்றும் பால்கனி முற்றிலும் இடிந்து விழுந்து. இந்த இடி பாடுகளில் சிக்கிய முதிய வரை மக்கள் உயிரை பண யம் வைத்து காப்பாற்றினர். குறிப்பாக, 163, 164, 157, 158 பாம்பே பில்டிங் என அழைக்கும் 4 அடுக்கு கட்டிடம் ஆகியவை தட்டி னாலே பெயர்ந்துவிழும் நிலையில் உள்ளன. இத்த கைய குடியிருப்பில்தான் மக்கள் மரணபீதியில் வாழ்ந்து வருகின்றனர். வாரிய குடியிருப்புகளை 35 ஆண்டுகளுக்கு பிறகு இடித்து மறுக்கட்டுமானம் செய்ய வேண்டுமென்று அரசாணை இருந்தும் அதற்கான நடவடிக் கைகளை அரசு எடுக்காதது ஏன்? பெரியஅளவில் அசம் பாவிதங்கள் நிகழும் முன்பு, அங்குள்ள மக்களை தற்காலிக குடியிருப்பு களுக்கு மாற்ற வேண்டும். வாழ்வாதாரத்திற்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குடியி ருப்புகளை விரைந்து கட்டும் பணியை தொடங்க வேண்டும். இவ்வாறு சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.