tamilnadu

img

செய்தித்துறை அமைச்சருடன் டியுஜே நிர்வாகிகள் சந்திப்பு....

சென்னை:
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (டியூஜே) சார்பில் சங் கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ். டி.புருஷோத்தமன் தலைமையில், சஙகத்தின் துணைத் தலைவர் பெ. சண்முகவேல், பொதுச் செயலாளர் கோ.முத்து, இணைச் செயலாளர் கி.மணிவாசகம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச் சரை சந்தித்தனர்.

அப்போது, பத்திரிகையாளர்கள் பிரச்சனைகள் குறித்தும், வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது, அவற்றை சட்டமாக்கிட உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சங்கத் தின் சார்பில், கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், இந்த கோரிக்கைகள் குறித்து மீண்டும்  சங்க நிர்வாகிகள், செய்தித் துறையின் உயர் அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்துச்சென்று முதலமைச்சரின் வழிக் காட்டுதலுடன் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்துள்ளார்.