tamilnadu

img

நிலமோசடி வழக்கில் அஜித் பவார் மகன் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? மும்பை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

நிலமோசடி வழக்கில் அஜித் பவார் மகன் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? மும்பை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டி ரா மாநிலத்தின் துணை முதல மைச்சராக இருக்கும் அஜித் பவா ரின் (தேசியவாத காங்கிரஸ்) மகன் பார்த் பவார் புனே அருகே ரூ. 1,820 கோடி மதிப் புள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை அடிமாட்டு விலையான ரூ. 300 கோடிக்கு வாங்கினார். இந்த பெரும் நில மோசடியில் தொழிலதிபர் ஷீத்தல் தேஜ்வானி (நிலத்தை விற்றுக் கொடுத்தவர் - ரூ. 21 கோடி பத்தி ரப்பதிவு மோசடி) என்ற பெண் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவா ளியான பார்த் பவார் மீது மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு சாதாரண வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. இந்நிலையில், ஷீத்தல் தேஜ்வானி ஜாமீன் கோரிய வழக்கு புதனன்று மாலை மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்டார், “புனே நில மோசடி வழக்கின், முதல் தகவல் அறிக்கையில் (FIR) பார்த் பவாரின் பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை? மற்றவர்களை மட்டும் மகாராஷ்டிரா காவல்துறை விசாரிக்கி றது. வழக்கு பதிவு செய்யாமல் துணை முத லமைச்சரின் மகனை காவல்துறை பாது காக்கிறதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்து வரும் புனே காவல்துறை, “பார்த் பவாரின் பெயர் எந்த ஆவணத்திலும் இல்லை என்ப தால் அவர் சேர்க்கப்படவில்லை” என விளக்கம் அளித்தது. ஆனால் நீதிபதி இதனை ஏற்கவில்லை. பின்பு மகாராஷ்டிரா அரசுத் தரப்பு வழக்கறிஞர், “சட்டத்தின்படி தேவையான நட வடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதனை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்டார், ஷீத்தல் தேஜ்வா னியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.