tamilnadu

img

தேர்வை தமிழில் நடத்தாது ஏன்?

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழில் நடத்தாது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வில்,தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு 20% இடஒதிக்கீடு என தெரிவிக்கப்பட்டது.இதற்காக ஜூன் மாதம் 23 மற்றும் 27-ஆம் தேதிகளில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது.அத்தேர்வானது ஆங்கிலத்தில் இருந்ததாக தமிழ் வழிப்பயின்ற 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் அதற்க்கான விளக்கத்தை வரும் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.