சென்னை, ஜூன் 6-சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், “இரு மொழிக் கொள்கையிலிருந்து தமிழக அரசு பின்வாங்காது” என்றார். அதேநேரத்தில் பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலான முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டதாகக் கூறினார்.கர்நாடகம், ஆந்திரா, தில்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முதலமைச்சருக்கு வந்ததாகத் தெரிவித்த அவர், மொழி விஷயத்தை பொருத்தவரை எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்றும் சர்ச்சை ஏற்பட்டதால் ட்விட்டர் பதிவை முதலமைச்சர் நீக்கியதாகவும் தெரிவித்தார்.