tamilnadu

img

உச்ச நீதிமன்றத்திற்கு அகதிகளிடம் இவ்வளவு ஆத்திரமும் வெறுப்பும் ஏன்?

சென்னை,மே.20- அகதிகள் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்திற்கு அகதிகளிடம் இவ்வளவு ஆத்திரமும் வெறுப்பும் ஏன்?  அகதிகளுக்குத் தேவை அன்பும் அரவணைப்பும் தான். தன் சொந்த நாட்டை இழந்து வெளியேறுகிற அவலம் யாருக்கும் வரக்கூடாது. அப்படிப்பட்ட நிலைமை வந்தால் ஆதரவு கொடுக்க மனித சமூகம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு திரும்பப் பெறப்பட தலைமை நீதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். என பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.