tamilnadu

img

இடம் பெயரும் தமிழர்கள் எங்கு செல்கிறார்கள்?

சென்னை:
வாழ்வாதாரத்தைத் தேடி தமிழகத்திலிருந்து இந்தியா வுக்குள் இடம்பெயரும் மக்கள் தென்னிந்திய மாநிலங்களுக்கே அதிகமாகச் செல்வதாகத் தெரியவந்துள்ளது.கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குத்தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ இடம்பெயர் கின்றனர். தமிழகத்தைப் பொறு த்தவரையில், இங்கிருந்து இடம்பெயரும் பெரும்பாலான தமிழர்கள் கர்நாடகா, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களையே தேர்ந்தெடுக் கின்றனர். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழ கத்திலிருந்து இடம்பெயரும் மக்கள் வட இந்திய மாநி லங்களை விடத் தென்னிந்திய மாநிலங்களையே தேர்ந்தெடுக் கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.தமிழகத்திலிருந்து அதிகபட்சமாக 7,36,821 பேர் கர்நாடகமாநிலத்துக்கு இடம்பெயர்ந்துள் ளனர். அதைத் தொடர்ந்து கேரளாவுக்கு 3,11,347 தமிழர் களும், ஆந்திரப் பிரதேசத்துக்கு 2,66,720 தமிழர்களும், மகா ராஷ்டிராவுக்கு 2,26,029 தமிழர்களும், தில்லிக்கு 45,826 தமிழர்களும், குஜராத்துக்கு 28,620 தமிழர்களும் இடம் பெயர்ந்துள்ளனர். கலாச்சாரஉறவு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் வளர்ச்சி போன்ற காரணங்களால்தான் பெரும்பாலான தமிழர்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. கர்நாடகா வுக்கு இடம்பெயர்ந்துள்ள 7.36 லட்சம் இந்தியர்களில் தமிழகத்தின் நகர்ப்புறங்களி லிருந்து மட்டும் 4.13 லட்சம்பேர் சென்றுள்ளனர். வேலைவாய்ப்புக்காக மட்டும் கிட்டத் தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் கர்நாடக மாநிலத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் பணியாற்றவே பெரிதும் விரும்புவதாக மெட்ராஸ் ஸ்கூல்ஆஃப் சோசியல் வொர்க் தலைவர் ராஜா சாமுவேல்ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் வேலை பார்க்கும்போது தேவையான சமயங்களில் சொந்த ஊருக்கு வருவது எளிதாக இருப்பதால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்டமாநிலங்களைத் தமிழக
இளைஞர்கள் தேர்ந்தெடுக் கின்றனர்.