சென்னை:
சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் இருந்து 12விமானங்கள் வெளிநாடு களுக்கு சென்றன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாடு முழுவதும் பன்னாட்டு விமானசேவை தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவை மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த என்.ஆர்.ஐ.மற்றும் வெளிநாட்டு வேலைக்கு செல்லக் கூடியவர்கள், வெளிநாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் வேலைக்கு திரும்பிச்செல்ல மத்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்றனர்.இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்கா, லண்டன், பாரீஸ், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு 12 சிறப்பு விமானங்கள் புறப்பட்டு சென்றன. இந்த விமானங்களில் 1,234 பேர் சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.