சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர்
நினைவுச்சுடருக்கு வழியெங்கும் வரவேற்பு
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், மேதினத்தை முதன்முதலில் கொண்டாடிய தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் நினைவுச்சுடருக்கு வழி யெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்.2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதனை யொட்டி மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்பு ராஜன், கே.ராஜேந்திரன் ஆகியோரை கொண்ட குழு ம.சிங்காரவேலரின் நினைவுச் சுடரை வடசென்னையிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்கிறது. இந்தக்குழுவினருக்கு மத்தியசென்னை மாவட்டம் பிரிக்ளின் சாலையில் சாலை மாநகர் கிளை, திடீர்நகர் கிளைகள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கே.பி.பூங்கா பகுதியில் பெண்கள்ஆரத்தி எடுத்து, பூ தூவி பயணக்குழுவினரை வரவேற்றனர். இந்த நிகழ்வுகளுக்கு எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆயிரம் விளக்கு பகுதி நமச்சிவாய புரத்தில் பகுதிக்குழு உறுப்பினர் இரணியன் தலையிலும், அண்ணாநகர் பகுதி தா.பி.சத்தி ரத்தில் பகுதிச் செயலாளர் கே.மகேந்திர வர்மன் தலைமையிலும் வரவேற்பளிக்கப் பட்டது. இந்த நிகழ்வுகளில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, கே.முருகன், எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், வே.தன லட்சுமி, எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். தென்சென்னை தென்சென்னை மாவட்டத்திற்கு வருகை தந்த பயணக்குழுவிற்கு மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் அசோக் பில்லர் முதல் தாம்பரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்க ணக்கான செந்தொண்டர்கள் இருச்சக்கர வாகன அணிவகுப்புடன் வரவேற்ளிபு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டையில் செந்தொண்டர்கள் பேரணி
மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான செந்தொண்டர் பேரணி,பிரச்சாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி,கெலமங்கலம்,அஞ்செட்டி ஒன்றிய குழுக்கள் சார்பில் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. தளி ஒன்றியச் செயலாளர் ஆர்.நடராஜன் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, நம்புராஜன்,மாவட்டச் செயலாளர் சி. சுரேஷ்,செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர்,சி.பிரகாஷ் சி.பி. ஜெயராமன்,கே.மகாலிங்கம், லெனின் முருகன், தேன்கனிக்கோட்டை மூத்தத் தலைவர் பி.நாகராஜ் ரெட்டி, கெலமங்கலம் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், ஓசூர் மாநகரம் மற்றும் ஒன்றிய குழுக்கள் சார்பில் செந் தொண்டர்கள் பயிற்சி நடைபெற்றது. மாநகர செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.தேவராஜ், பிஜி மூர்த்தி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.