tamilnadu

12 இடங்களில் சதம் அடித்த வெயில்

சென்னை, மே 20-தமிழகத்தில் சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. கரூர், திருத்தணி, வேலூரில் அதிகபட்சமாக தலா 108.5 டிகிரி பதிவானது.கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனல் காற்றும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை.சென்னை மீனம்பாக்கத்தில் 101.48 டிகிரி, திருத்தணி, கரூர் 109, வேலூர் 108, தருமபுரி, திருச்சி, மதுரை- 106, சேலம் 105, தஞ்சை 104, பாளையங்கோட்டை-103, நாமக்கல் 101, சென்னை நுங்கம்பாக்கம் 96 டிகிரி வெயில் கொளுத்தியது.அனல் காற்று வீசும்தமிழக உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.