வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சாதி ஆணவப் படுகொலை சமூகக் கொடுமை - இது ஒரு மாபெரும் குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவிலே முதன்முறையாக 2009 ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சாதி ஆணவப் படுவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாதியற்ற சமூகத்தை நாம் தமிழகத்தில் உருவாக்குவோம். “சாதி ஆணவப் படுகொலை சமூகக் கொடுமை - இது ஒரு மாபெரும் குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவிலே முதன்முறையாக 2009 ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் வேண்டும் என்று மசோதாவைத் தாக்கல் செய்து முன்மொழிந்து பேசியது எங்கள் தோழர் பிருந்தா காரத்.
இரண்டாவதாக தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 2015 ஆண்டு எங்களின் சட்டமன்றக்குழுத் தலைவராக இருந்த அ.சவுந்திரராசன் முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மசோதாவை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.
நாங்கள் இன்று தான் பேசவில்லை, தொடர்ச்சியாகவே இந்தப் பிரச்சினையில் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சாதி ஆணவப் படுகொலையை எதிர்க்கிறோம்.
சாதி ஆணவப் படுகொலை - இது கௌரவக் கொலை என்று தான் எல்லாக் காலத்திலும் பேசப்பட்டு வந்தது. கொலையில் என்ன கௌரவம் இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பி, அது கௌரவக் கொலை அல்ல சாதி ஆணவக் கொலை என்கிற வார்த்தையை தமிழ்நாட்டில் புழக்கத்திற்குக் கொண்டு வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
எங்கள் போராட்டம் கொள்கை சார்ந்தது தவிர குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது அல்ல. இத்தகைய கொலையில் எந்தச் சாதியினர் ஈடுபட்டாலும் நாங்கள் அதனை எதிர்ப்போம், அதற்கு எதிராகக் களத்தில் நிற்போம்.
சாதி வெறியர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் வலியுறுத்துவது - சாதிச் சண்டைகள் வேண்டாம், சமயச் சண்டைகள் வேண்டாம். நம் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றால் "சரி" என்கிற இரண்டு எழுத்து தான். அதைச் சொல்லிவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. "சரி" என்று சொல்வதற்குப் பதிலாக சாதி என்று சொல்லிக்கொண்டு திரிகிறான் - அது தான் பிரச்சினை.
நான் தமிழ்நாடு அரசை வற்புறுத்துவது என்னவென்றால், வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் வேண்டும் என்று மசோதாவைத் தாக்கல் செய்து முன்மொழிந்து பேசியது எங்கள் தோழர் பிருந்தா காரத்.
இரண்டாவதாக தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 2015 ஆண்டு எங்களின் சட்டமன்றக்குழுத் தலைவராக இருந்த அ.சவுந்திரராசன் முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மசோதாவை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.
நாங்கள் இன்று தான் பேசவில்லை, தொடர்ச்சியாகவே இந்தப் பிரச்சினையில் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சாதி ஆணவப் படுகொலையை எதிர்க்கிறோம்.
சாதி ஆணவப் படுகொலை - இது கௌரவக் கொலை என்று தான் எல்லாக் காலத்திலும் பேசப்பட்டு வந்தது. கொலையில் என்ன கௌரவம் இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பி, அது கௌரவக் கொலை அல்ல சாதி ஆணவக் கொலை என்கிற வார்த்தையை தமிழ்நாட்டில் புழக்கத்திற்குக் கொண்டு வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
எங்கள் போராட்டம் கொள்கை சார்ந்தது தவிர குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது அல்ல. இத்தகைய கொலையில் எந்தச் சாதியினர் ஈடுபட்டாலும் நாங்கள் அதனை எதிர்ப்போம், அதற்கு எதிராகக் களத்தில் நிற்போம்.
சாதி வெறியர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் வலியுறுத்துவது - சாதிச் சண்டைகள் வேண்டாம், சமயச் சண்டைகள் வேண்டாம். நம் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றால் "சரி" என்கிற இரண்டு எழுத்து தான். அதைச் சொல்லிவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. "சரி" என்று சொல்வதற்குப் பதிலாக சாதி என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் - அது தான் பிரச்சினை.
நான் தமிழ்நாடு அரசை வற்புறுத்துவது என்னவென்றால், வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.