‘டிக் டாக்’ செயலி: காவல்துறை கடும் எச்சரிக்கை
விழுப்புரம், ஏப்.23-விழுப்புரம் மாவட்டத்தில் டிக்டாக் ஆப்பை தவறான நோக்கில் செயல்படுத்தி, வலைதளத்தில் பதிவேற்றம் செய் தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-சாதி, மதம் ரீதியாக பிற சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில், மதம், சாதி சம்பந்தமாக அவதூறாக ‘டிக்டாக்’ செயலி மூலம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர்.மக்கள் தங்களின் நியாயமான கோரிக் கைகள் மற்றும் எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாக மட்டுமே வெளிப்படுத்த வேண் டும். இதுபோல் பிற சாதி, மதத்தை விமர் சித்து வன்முறையை தூண்டும் விதத்திலும், தேசிய மற்றும் மாநில கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்து வீடியோ பதிவிடுதல், மனதை புண்படுத்தும் வாசகங் களை பதிவு செய்யக் கூடாது.பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சமூக வலைதளங்களை நல்ல நோக்கத் திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நோக் கிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில், இருவேறு சமூகத்தினரிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி
ஓசூர், ஏப்.23-பென்னார் கால்பந்தாட்ட பயிற்சி மையமும், சிறீ குருகுலம் உயர் நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கால்பந்தாட்ட பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் ஏப்ரல் 13 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் காவேரிப்பட்டிணம் கேரளா மற்றும் ஓசூரை சேர்ந்த 40 மாணவர்கள் சிறீகுருகுலம் பள்ளியிலேயே இருப்பிடம் உணவும் வசதியுடன் தங்க வைத்து பயிற்சி கொடுத்தனர்.இந்திய கால்பந்தாட்ட அணியில் பங்கு பெற்ற முன்னாள் வீரரும் ரயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவருமான சென்னை ஹாரிங் டன் கால்பந்தாட்ட முதன்மை பயிற்சியாளர் சிவசுந்தரம் தலைமையில், ரயில்வே துறை கால்பந்தாட்ட அணியில் மூன்று முறை கோல் கீப்பராக விளையாடிய பயிற்சியாளர் ராஜாவும் இணைந்து பயிற்சி அளித்தனர்.தமிழ்நாடு ஜூனியர் மாநில பிரிவுக்கு இரண்டு முறை விளையாடிய அன்பு, கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் சசிகுமார், சிலம்பரசன், அண்ணாமலை ஆகியோரின் பயிற்சியில் 20,21 தேதிகளில் லீக், மற்றும் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றது.கேரளாவின் பாலாக்காடு டேலண்ட் அகாடமி ஓசூர், காவேரிப்பட்டிணம் , கால்பந்தாட்ட மாணவர்களும் இரு அணிகளாக நின்று விளையாடினர்.ஓசூர்குணம் ஸ்பெசாலிட்டி மருத்துவ மனையின் மருத்துவர்கள் பிதீப் குமார், செந்தில், ஸ்ரீகுருகுலம் பள்ளியின் தாளாளர் மோகன் சுந்தர், முதல்வர் சரோஜாமணி ஆகியோர் தலைமை ஏற்று பயிற்சியிலும் போட்டிகளிலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சிறப்பு பயிற்சியாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்க ளுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.