சென்னை,டிசம்பர்.27- மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சதீஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சதீஸ்குமார் என்பவர்தான் குற்றவாளி என அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வருகின்ற 30ஆம் தேதி குற்றவாளி சதீஸ் குமாருக்கான தண்டனை விவரம் வெளியாகும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.