அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் ஆர்.வேல்ராஜ் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆற்றல் ஆய்வுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இத்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். கல்வித்துறையில் 33 ஆண்டுகள் கொண்டவர். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 193 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.