states

img

உத்தரப்பிரதேசத்தில் கல்வித்துறையில் மிகப்பெரும் மோசடி

உத்தரப்பிரதேசத்தில் கல்வித்துறையில் மிகப்பெரும் மோசடி

1,372 போலி பட்டம் ; துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது

பிரதமர் மோடியின் மாடலான குஜராத் மாநிலத்தைப் போன்றே முறைகேடு சம்பவங்களின் கூடாரமாக மாறி வருகிறது பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப்பிர தேசம். இந்த மாநிலத்தில் கல்வித்துறை யில் மிகப்பெரும் மோசடி வெளிச்சத் திற்கு வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழ கத்தில் போலி பட்டங்கள் வழங்கப்படுவ தாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் தலை மையிலான சிறப்பு அதிரடிப்படை குழு வினர் பல்கலைக்கழகத்தில் நடத்திய சோதனையில் 1,372 போலி பட்டங்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் பறி முதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பல்கலைக்கழ கத்தின் தலைவர் விஜேந்திர சிங் ஹுடா, துணைவேந்தர் நிதின் குமார் சிங் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பல் பல்வேறு படிப்புகளுக்கான போலி சான்றிதழ்க ளை ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்து வந்தது விசாரணை யில் தெரியவந்துள்ளது. மேலும் சோத னையின் போது 262 போலி தற்காலிக மற்றும் இடமாற்றல் சான்றிதழ்கள், பல லட்சம் ரூபாய் ரொக்கம், 14 செல்போன் கள் மற்றும் 7 லேப்டாப்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தற்போது சிறப்பு அதிரடிப்படை குழுவினர் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.