ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன், திட்டச் செயலாளர் கருணாநிதி, ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், கிளை திட்டச் செயலாளர் துரை, இணைச் செயலாளர் ராஜேந்திரன், பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு தங்க மலர் ஆகியோர் உரையாற்றினர்.