tamilnadu

img

அரசு ஊழியராக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

சென்னை:
அரசு ஊழியராக்க கோரி புதனன்று (ஜன.20) தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியருக்கு பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண் டும் என்று கோரி வருகின்றனர்.

இதற்காக தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வட்டார அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னையில் கிண்டி, எழும்பூர், அசோக் நகர், நந்தனம், மைலாப்பூர், பல்லாவரம் உள்ளிட்டு 10 வட்டார அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜன.29 தர்ணா
கிண்டியில் உள்ள வட்டார அலுவலகம் முன்பு தென் சென்னை மாவட்டத் தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.டெய்சி பேசுகையில், “தமிழகத்தில் உள்ள 420 வட்டார அலுவலகங்கள் முன்பும் ஜன.20, 21 தேதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜன.29 அன்று சென்னை தரமணியில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும், பிப்.5 அன்று முற்றுகைப் போராட் டமும் நடைபெற உள்ளது” என்றார்.இந்தப் போராட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் பி.சித்ரசெல்வி, எஸ்.ஹேமபிரியா, மாவட்டச் செயலாளர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பேசினர்.