tamilnadu

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை, ஜூன் 15- நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை மீண்டும்  கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் அருகே கால்வாய் கரை யோரம் வசித்த சத்தியவாணி முத்து நகர் குடி யிருப்புகளை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமி ழக அரசு அப்புறப்படுத்தியது. அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் ஒருபகுதியினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 2 வருடமாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு, அருகாமையில் உள்ள கே.பி. பார்க்கில் தமிழக அரசு வீடுகளை ஒதுக்கியது.  இந்த போராட்டத்தில் வெற்றி பெற்ற மக்களைச்  சந்தித்து புதனன்று (ஜூன் 15) கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரி வித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தை மம்தா பானர்ஜி கூட்டியிருந்தாலும் கூட, எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பாஜகவிற்கு  எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஆகவே, அந்தக் கூட்டத்தில் கட்சியின் தரப்பில்  எளமரம் கரீம் எம்.பி., கலந்து கொண்  டுள்ளார்.

பாஜக தோற்கும்
டெக்கான் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி யை விசாரிப்பது திட்டமிட்ட பழிவாங்கல் நட வடிக்கை. தங்க கடத்தல் வழக்கில் கேரள முத லமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்று அங்கு  பாஜக கலவரம் செய்து வருகிறது. அதேபோன்று டெக்கான் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தியை பழிவாங்குகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களை அரசியல் ரீதி யாக எதிர்கொள்ளத் திரணியில்லாமல், மதிப்பை  (இமேஜ்) கெடுக்கும் வகையில் செயல்படுகின்ற னர். இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கையில் பாஜக படுதோல்வி அடையும்.

மீண்டும் சட்டம் 
நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை மீண்டும்  கொண்டு வர வேண்டும். நகர்ப்புறங்களில் வசதி  படைத்தவர்கள் ஏராளமான வீடுகளை வாங்கு கின்றனர். இதனால் விலை ஏறுகிறது. இவர் களோடு போட்டிபோட்டு சாதாரண மக்களால் வீடுகளை வாங்க முடிவதில்லை. அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களால் கூட சென்னை நகரத்தில் வீடுவாங்க முடியாத நிலை உள்ளது. பாரம்பரிய சொத்து வைத்திருப்பவர்கள் கூட  அவற்றை விற்றுவிட்டு வெளியேற முயற்சிக் கின்றனர். எனவே, நகர்ப்புற உச்சவரம்பு சட்டம்  கொண்டு வர வேண்டும்.

நவீன முறையில் விசாரணை
காவல்நிலையங்களில் படுகொலை நடை பெறுவது தொடர்கிறது. காவல்நிலையச் சாவு கள் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையை அரசாங்கம் பயன்படுத்தும் முறை; அளிக்கப்படுகிற பயிற்சி போன்றவை, மனித மாண்புகளை குறைத்துவிடுகிறது. அதீத நட வடிக்கைகளில் காவல் அதிகாரிகள் ஈடுபடு கின்றனர். குற்றங்களை, குற்றவாளிகளை காவல்  துறை கண்டுபிடிக்க வேண்டும். குற்றம் நடக்கா மல் தடுக்க வேண்டும். அடித்து விசாரிக்கும்  முறையை பழமையானது. நவீன பயிற்சி  முறை; விசாரணை முறைகளை கையாள  வேண்டும். காவல்துறையை பயிற்றுவிப்ப தில் ஏற்பட்டுள்ள தோல்வியே காவல் நிலையச் சாவுகளுக்கு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத், மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் உடனிருந்த னர்.