tamilnadu

img

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என  ஐ.நா சபையில் அறிவிப்பு

இந்தியாவில் புதிய தடுப்பூசிகளின் வருகையால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளதாக டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா  சபைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர்  டி.எஸ்.திருமூர்த்தி, ஐ.நா. சபையின்  முன்னேற்றத்தை நோக்கி 2030 - நிகழ்ச்சி நிரல்’ குறித்த பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில், இந்தியா கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ உதவிகள் மற்றும் தடுப்பூசிகளை உலகிற்கு அளித்துள்ளது. 

தடுப்பூசிகள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களின் சந்தை எப்போதும் வெளிப்படையாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், உபரியாக உள்ள தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘வேக்சின் மைத்திரி’ நிகழ்ச்சி மூலமாக  ஏற்றுமதி செய்யப்படும்.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக இந்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.இதுவரை 6 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகளை சுமார் 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. 

இந்தியாவின் கோவின் இணையதளம் உலகிற்குக் கொடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.‘உலகம் முழுதும் ஒரே குடும்பம்’ என்னும் கருத்தின் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடச் சர்வதேச சமூகம் ஒன்று சேர வேண்டும் என்று டி.எஸ்.திருமூர்த்தி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.