சென்னை, நவ. 13 - அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் ஊழியர்கள் அனை வருக்குமான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நவம்பர் 12, 13 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப் பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையில் புதனன்று (நவ.13) காலை பணியிலிருந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினர் ஒருவர் சராமாரியாக கத்தியால் குத்தி கொலைவெறியோடு தாக்கியுள்ளார். இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உயரிய சிகிக்சை வழங்குக! கத்திக் குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதை உத்தர வாதம் செய்திட வேண்டும். போராட்டத் தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள் கிறது.
காலிப்பணியிடங்களை நிரப்புக!
மேலும், அரசு மருத்துவமனை களில் மருத்துவர் உள்ளிட்ட மருத்து வம் சார்ந்த ஊழியர்கள் போதிய அளவில் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். பாதுகாப்பு நட வடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கு உகந்த முறையில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரந்தர பணியாளர்களைக் கொண்டு உடனடியாக நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மதுரை முல்லை நகர் - முன்னாள் இராணுவ குடியிருப்பு - நேதாஜி மெயின் ரோடு மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிடுக!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 25-ஆவது வார்டின் ஒரு பகுதியான - முல்லை நகர், முன்னாள் இராணுவ வீரர் குடியிருப்பு, நேதாஜி மெயின் ரோடு பகுதிகளில் சுமார் 5000 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் முறைசாரா தொழிலாளர்களாக - பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு குடியிருக்கும் மக்களில் ஒருபகுதியினர் குடிசை மாற்று வாரியத்தில் பணம் கட்டி ரசீதும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் பாதாளச் சாக்கடை திட்டம் உள்பட செயல்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வங்கி கடன் பெற்று தங்களது வீடுகளை கட்டியுள்ளனர். மேலும், தங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு மனுக்களும் கொடுத்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மக்களை வெளி யேற்றும் நடவடிக்கைகளை கைவிட்டு அந்த பகுதி மக்களின் குடியுரிமை - வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், மேற்கண்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிட தகுந்த நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.