விருதுநகர்,நவ.13- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகு திக்குட்பட்ட கஞ்சநாயக்கன் பட்டி ஊராட்சி கிழக்கு தெரு வில் புதிய கலையரங்க கட்டி டத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் திறந்து வைத்தார். இதில் அமைச்சர் பேசுகை யில், ஜனவரி மாதம் முதல் ரேசன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனை வருக்கும் விரைவில் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.