கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கால்நடைப்பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களுடைய அரசியல் உதவியாளர் கர்ணன் என்ற கனகராஜ் உடுமலை சட்டமன்ற மன்ற அலுவலகத்தில் இருந்தார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி இழுத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி பதிவுகள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.