tamilnadu

யூடியுப் சேனல் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு

சென்னை, ஜூலை 29 - சேனல் விஷன் என்ற யூ-டியூப் சேனல் மதன் ரவிச்சந்திரன்  மீது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதய நிதி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், மதன் ரவிச்சந்திரன் என்பவர் சேனல் விஷன் எனும் யூடியூப் சேனலில், தம்மை  பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இது தனக்கும், தனது குடும்பத்தாரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன்  ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும்  என்று கோரப்பட்டுள்ளது.