சென்னை:
தமிழ்நாட்டில் நீட் ரத்து செய்ய அனைவரும் ஒங்கிணைந்து இயக்கமாக முன்னேடுத்து செல்ல குரல் கொடுப்போம் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்தார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.முதன் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் தனது அறிமுக உரையில், “பாரம் பரியமும், பெருமையும் மிக்க தமிழ் நாடு சட்டப்பேரவையில் பேசுவதற்கான வாய்ப்பை அளித்த பேரவைத் தலைவர், முதலமைச்சர், அவை முன்னவர் தொடங்கி அமைச்சர்கள், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தோழமைக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.
தலைவர்களுக்கு நன்றி...
அதேபோல், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த தோழமை கட்சிகளின் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், கே.ஏ.எம்.காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பொறுப்பு மிக்க பணி...
அரசியலை அருகில் இருந்து கவனித்து சட்டப்பேரவையின் நடைமுறைகளை ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்தாலும், இதுநாள்வரை ஒரு பார்வையாளனாக மட்டுமே அவையை நான் கவனித்து வந்திருக்கிறேன். முதல்முறையாக ஒரு பங்கேற் பாளனாக உள்ளிருந்து ஒவ்வொரு விஷயங்களையும் உற்று நோக்கும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன். பேரவையின் உறுப்பினராக இன்னும் நெருங்கி வந்து பார்க்கும்போதுதான் இதன் ஜனநாயகத் தன்மையும், இதன் நடைமுறையும் என்னை பொறுப்பு மிக்கவனாகவும், மேலும் எளிமையானவனாக உணரச் செய்யும் வகையிலும் இருக்கிறது எனவும் உதயாநிதி கூறினார்.
அவர்களில் ஒருவனாக...
தேர்தல் வெற்றிக்கு பிறகு தொகுதி மக்கள் காட்டும் அன்பும், பாசமும் அவர்களில் ஒருவனாகவே என்னை மாற்றிவிட்டது. அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் வீட்டு பிள்ளையாகவே என்னிடம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்காக உழைப்பேன் என்று இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன் என்றார்.
முதல் 100 நாட்கள்...
இந்த பேரவையில் இங்கு படமாக நிற்கும் நம் தலைவர் கலைஞர் வழியில், அவர்களது மறுவுருவமாக நம் முதலமைச்சர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் இந்த அரசு 100 நாட்களுக்குள்ளாகவே எண்ணற்ற சாதனைகளை செய்து முடித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத விஷயங் களை கூட செய்துகாட்டியுள்ளோம். பல திட்டங்களை இந்த அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே செயல் படுத்தி, மாநிலத்தின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் நிறைவேற்றப்பட்ட பட்டிலை படித்தார்.
சென்னையை சீரழித்த அதிமுக
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை மாநகரை மேம் படுத்தவென எந்த திட்டமும் செயல் படுத்தவில்லை. இந்த சூழலில், நமது முதலமைச்சர் மேயராக இருந்த போது அறிமுகப்படுத்திய சிங்காரச் சென்னை திட்டம், சிங்காரச்சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, சென்னையை எழில்மிகு மாநகராக்கும்.சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அறிவிப்பும், திட்டமும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதால் நமது அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது எனவும் உதயநிதி தெரிவித்தார்.
முதியோர் ஓய்வூதியம்
நான் தமிழ்நாடு முழுவதும் தேர் தல் நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது என்னிடம் சொல்லப்பட்ட முக் கியமான விஷயம், “திமுக ஆட்சியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு முறையாக வழங்கப் பட்ட முதியோர் உதவித்தொகை அதிமுக ஆட்சியில் பலருக்கு நீக்கப் பட்டுள்ளது” என்பது தான். எனவே, வீடிருந்தும் வருவாயின்றி, பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியோர்களுக்கு மீண்டும் முதியோர் உதவி தொகையைவழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வு: ஊடகங்களுக்கு வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு. தங்கை அனிதாவில் தொடங்கி செஞ்சி பிரதீபா, ஏஞ்சலினா ஸ்ருதி, திருச்சி சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், கோவை சுபஸ்ரீ திருச்செங்கோடு மோதிலால், தருமபுரி ஆதித்யா, மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, தேனி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா என 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.தங்கை அனிதா, ஆதித்யா, விக்னேஷ், மோதிலால், ஜோதிஸ்ரீ துர்கா ஆகியோர் வீடுகளுக்கே நான் நேரில் சென்று மாணவர்களின் பெற் றோருக்கு ஆறுதல் சொன்னேன். பிள்ளைகளை பறிகொடுத்த பெற் றோர்கள் சொன்ன ஒரே வார்த்தை நீட் வேண்டாம்தான் என்பதையும் சுட்டிக் காட்டினார்.கடந்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும்.ஆனால், எதையும் கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வு அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதம் கிடையாது. ஏன்? பாஜகவினர் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
நீட் தேர்வு தவறானது என்பதை உணர்ந்துள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் அவற்றின் உரிமையாளர்களும் நீட்டுக்கு எதிரான தங்களின் குரலை பதிவு செய்ய வேண்டும்.எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுப்போம்.நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும்.நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். அதில் நானும் ஒருவன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.