tamilnadu

“நாட்டு மக்களின் நம்பிக்கையை டிரம்ப் பெறவில்லை” ஈரான் தாக்குதல் குறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு கடும் கண்டனம்!

“நாட்டு மக்களின் நம்பிக்கையை டிரம்ப் பெறவில்லை”  ஈரான் தாக்குதல் குறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு கடும் கண்டனம்!\

நியூயார்க், மார்ச் 6- ஈரான் மீது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ள போர் குறித்து ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் ஆசிரியர் குழு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க மக்களும் உலக நாடுகளும் தன்னை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று டிரம்ப் எதிர் பார்ப்பதாகவும், ஆனால் அத்தகைய நம்பிக்கையைப் பெறுவ தற்கு அவர் தகுதியற்றவர் என்றும் அந்த இதழ் சாடியுள்ளது. கண்மூடித்தனமான நம்பிக்கையை எதிர்பார்க்கும் ஜனாதிபதி ஈரான் மீதானத் தாக்குதலுக்கான போதிய காரணங்களை யோ அல்லது அதன் பின்விளைவுகள் குறித்தத் தெளி வானத் திட்டங்களையோ அமெரிக்க அரசு இதுவரை முன் வைக்கவில்லை. “ஈரான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், அமெரிக்க மக்களும் ஒட்டுமொத்த உலகமும் தன்னை கண் மூடித்தனமாகத் (Blind trust) ஆதரிக்க வேண்டும் என்று ஜனாதி பதி டிரம்ப் கூறுகிறார். ஆனால், அத்தகைய நம்பிக்கையை அவர் சம்பாதிக்கவில்லை” என்று ஆசிரியர் குழு தனது கட்டு ரையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளது. பொறுப்பற்ற ராணுவ நடவடிக்கை சர்வதேசச் சட்டங்களை மீறி ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதும், அதற்கான தார்மீகக் காரணங்களை விளக்கா மல் இருப்பதும் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கு அழ கல்ல என அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்க ளில் டொனால்டு டிரம்ப் எடுத்துள்ள முரண்பாடான முடிவுக ளும், வெளியுறவுக் கொள்கையில் அவர் காட்டும் அராஜகப் பிடிவாதமும், இந்தப் போரின் நோக்கம் குறித்துப் பெரும் சந்தேகங்களை எழுப்புகின்றன. உலக அமைதிக்கு அச்சுறுத்தல் மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் இத்தகைய ராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவின் பாதுகாப்பை உறு திப்படுத்துவதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்தும் என்றே நியூ யார்க் டைம்ஸ் கருதுகிறது. சரியான ஆதாரங்கள் இன்றித் தொடுக்கப்படும் இந்தப் போர், பல்லாயிரக்கணக்கான அப் பாவி உயிர்களைப் பலிவாங்குவதுடன் உலகப் பொருளாதாரத் தையும் நிலைகுலையச் செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைத் தரவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலமே ஒரு தலைவர் பெற முடியும்;  மாறாக, அதிகாரத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையைத் தானா கவே வழங்கிவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சர்வாதி காரப் போக்காகும் என ஆசிரியர் குழு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.