சென்னை:
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும். பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தர வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டியநிலுவைத்தொகை உள்ளிட்டவை களை தர வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பாக இறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 25 அன்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்தத்தில் 1.25 லட்சம் தொழிலாளர்களில் 1.10 லட்சம்பேர் பங்கேற்றனர். இதனால் 90 சதவீதமான பேருந்துகள் இயங்க வில்லை. வேலைநிறுத்தத்தின் வீரியத்தையடுத்து தமிழக அரசு ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணத்தை அறிவித்தது. தொழிற்சங்கங்களுடன் பேசாமல் அரசு தன்னி ச்சையாக அறிவித்த இடைக்கால நிவாரணத்தை தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர்.இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 25 அன்று இரவு தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பிப்ரவரி 26 அன்று தொழிலாளர் நல இணை ஆணையர் முன்புநடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 27 அன்று தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்பின்னர் பல்லவன் இல்லம் முன்பு திரண்டிருந்த தொழிலாளர்களிடம் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், எல்பிஎப் பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசுகையில், “ தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் தமிழக அரசுஆணவத்தோடு நடந்துகொண்டது. தன்னிச்சையாக ஆயிரம் ரூபாய்இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தால் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஏதும் செய்ய முடியாது என்று சாக்கு சொல்கின்றனர். தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால்தான் அரசிடம் இருந்து 1500 கோடி ரூபாய் அளவிற்குபெறமுடிந்துள்ளது. திமுக தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்களின் நலன்கருதியும், தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கிறோம். புதிதாக அமைய உள்ளஅரசிடம் பேச்சுவார்த்தை நடத்திகோரிக்கைகளை வென்றெடுப் போம். 2 மாதம் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்போம். அதிமுகவை ஆட்சியிலிருந்து தள்ளி வைப்போம்” என்றனர்.