சென்னை:
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, ஞாயிறன்று (ஜன. 17) பலர் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் திரும்பியதால், செங்கல்பட்டு, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட சுங்கச் சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.அதேபோல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எண்ணிக்கையும், பயணிகள் எண்ணிக்கையும் வழக் கத்தை விட அதிகமாக இருந்தது.