தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 43 சுங்கச் சாவடிகள் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படு கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நெடுஞ்சாலைகளான சென்னை- பெங்களூர், சேலம், மதுரை சுங்கசாவடிகள், செங்கல்பட்டு-பரணூர், சென்னை சூரப்பேடு, சென்னை பைபாஸ் ஆகியவற்றில் 2005-ஆம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2016 வரை ரூ.1,500 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் ஆத்தூர், பூதக்குடி, சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், செங்கல்பட்டு பரனூர், விழுப்புரம் வானூர், திருப்பெரும்புத்தூர், வாணியம்பாடி, சென்னை சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.