tamilnadu

img

புதுச்சேரியில் ஜனநாயகத்தைக் காக்க ஆளுநரை உடனே திரும்பப் பெறுக.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

சென்னை:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனநாயகத்தை காக்க துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம்ஜனவரி 9 அன்று  மாநிலச் செயற்குழுஉறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின்
 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

புதுச்சேரியில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும்  மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மத்தியஅரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற் குழு வலியுறுத்துகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி அவர்கள் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, சுயேச்சையாக செயல்படவிடாமல் தடுக்கப்பட்டு வருகிறது. மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தான் அதிகாரம் என்ற ஜனநாயக, அரசியல் சட்ட மாண்புகளுக்கு எதிராக, இதுகுறித்து  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் துணைநிலை ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.  மத்தியபாஜக அரசின் மக்கள் விரோத திட் டங்களை புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்  எதிர்ப்பையும் மீறி நடைமுறைப்படுத்தி வருகிறார். மாநில அரசின் முடிவான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை  போடுகிறார்.  புதுச்சேரி மின்சார துறையை தனியாருக்கு தாரை வார்க்கவும், பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக் கட்டி நிரந்தரமாக ரேசன் கடைகளை மூடிடவும் முனைப்புடன் செயல்படுகிறார். அரசு அனுப்பிய இலவச அரிசி வழங்கல் உள்பட 30-க்கும் மேற்பட்ட கோப்புகளை முடக்கியுள்ளார்.இவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு மக்கள் மத்தியில் அவப் பெயரை ஏற்படுத்தி பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்புகள் புதுச்சேரியில் கால் பதிக்கஎன்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார் ஆளுநர். நியமன எம்எல்ஏ விவகாரத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது.

தொடர் போராட்டம்
கடந்த வாரத்தில் தனக்கும், தனது அதிகாரிகளுக்கும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டிதுணை ராணுவப்படையை பெருமளவில் ராஜ்பவன், கடற்கரை பகுதி மற்றும் மக்கள் நடமாடக்கூடிய முக்கியமான பகுதிகளில் குவித்துள்ளார். மாநில அரசை கலந்தாலோசிக்காத, தன்னிச்சையான ஆளுநரின் இந்த செயல்பாடுஅவரது அதிகார எல்லையை மீறுவதாக உள்ளது.புதுச்சேரியில் முக்கிய இடங்களில்இன்றும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படை  நிற்க வைக்கப்பட்டுள்ளது.  இதனால் புதுச்சேரி மக்களின் இயல்பான நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கின்ற பின்னணியில் இதுபோன்ற செயற்கையான பதற்றத்தை உருவாக்கி அரசுக்கு கெட்டபெயர் உருவாக்குவது அவரது நோக்கமாக இருக்கிறது. இந்த அதிகார மீறலை எதிர்த்து ஜனநாயகரீதியில் அமைதியான முறையில் போராட்டம்நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான அனைத்துக்கட்சிகள்  சார்பில் அனுமதி கோரப்பட்டதை மறுத்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியரை நிர்ப்பந்தித்து 144 தடைஉத்தரவையும் போட வைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், மாற்று இடத்தில் அரசுத்துறையின் அனுமதியுடன் அமைதியான முறையில் அண்ணா சிலை அருகே வெள்ளியன்று முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மக்களின்இந்த போராட்டத்திற்கு மாநில முதல்வரே தலைமையேற்று நடத்தி வருகிறார். இப்போராட்டத்தில் பெருமளவு மக்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். இப்போராட் டம் தற்போது மேலும் தீவிரமடைந்து வருகிறது.புதுச்சேரி யூனியன் பிரதேசம் வேறு மாநிலத்துடன் இணைக்கப்பட்டோ அல்லது மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில்  ஜனநாயகமற்ற முறையில் எடுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆளுநரின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத, மக்களின் உரிமைகளை பறிக்கும் போக் கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநரின் தூண்டுதலால் போடப்பட்டுள்ள  144 தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மதிக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த விடாமல் தடுக்கின்ற,  பாரதியஜனதா கட்சியின் அரசியல் நோக்கங் களை நிறைவேற்றுகிற கையாளாக செயல்படுகிற துணைநிலை ஆளுநரை உடனடியாக மத்திய அரசாங்கம் திரும்பப்பெற வேண்டுமென்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.