tamilnadu

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் விநியோக நிறுவன உரிமம் ரத்து

சென்னை, மார்ச் 18- சமையல் எரிவாயு சிலிண்டர்  டெலிவரி செய்ய கூடுதல் கட்ட ணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என  பொதுத்துறை எண்ணெய் நிறுவ னங்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் விநியோகஸ் தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அன்ன னூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக, விநியோக நிறுவ னங்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகிறது எனவும், இந்த தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், வினியோக முக வர்கள் எடுத்துக் கொண்டு டெலி வரிக்காக நுகர்வோரிடம் கட்ட ணம் வசூலிக்கும்படி டெலிவரி  செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப் படுவதாகவும் குற்றம் சாட்டி யுள்ளார். அந்த வகையில் பொதுமக்க ளின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி  அவர்களின் பணியை வரன்முறை  செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று (மார்ச் 18)  விசார ணைக்கு வந்தபோது, இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவ னங்களின் சார்பில் பதில்  மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. அதில் சமையல் எரிவாயு  விநியோக உரிமை ஒப்பந்தம்  செய்யும் போதே, பல்வேறு விதி முறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வும், அதன்படி சமையல் எரி வாயு சிலிண்டர்களை வினியோ கிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட விநி யோக நிறுவனத்திற்கு வழங்கப் படும் கமிஷன் தொகையில் 20 முதல் 35 விழுக்காடு வரை அப ராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து 4 முறை இந்த முறை கேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப் பட்ட விநியோக நிறுவனத்தின் உரி மம் ரத்து செய்யப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடு வழங்கப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. 2019 - 20ஆம் ஆண்டில் தமிழ கத்தில் மட்டும் 21 லட்சத்து 74  ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை யாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக வும், கூடுதல் கட்டணத்தை  செலுத்  துவதை தவிர்க்க ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும்படி நுகர்வோர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் டெலிவரி செய்ய  கூடுதல் கட்டணம் வசூலித்தால்,  எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர் கள் சேவையில் திருப்தி இல்லை என்றால் நுகர்வோர் தங்கள் சமையல் எரிவாயு இணைப்பை வேறு நிறுவனத்திற்கும், வேறு விநியோகஸ்தர்களிடமும் மாற்றிக்  கொள்ளும் வசதியும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்த பதில் மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய ஏது வாக விசாரணையை ஏப்ரல் 8ஆம்  தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்த னர். இந்த வழக்கில் தங்களை யும் இணைக்கக் கோரி தமிழ்நாடு  எல்பிஜி சிலிண்டர் டெலிவரி தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.