சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 8 அன்று காலமானார். அவருக்கு வயது 84.திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை எம்.பி., எம்எல்ஏ, சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவராகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். உடல்நலக் குறைவால் உயிரிழந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக் கப்பட்டது.
அவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து, அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தமிழகத்துக்குப் பெரும் பெருமை சேர்த்தவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
மறைந்த காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். தமிழக நலனுக் காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டுப் பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிடர்கழக தலைவர் கி.,வீரமணி, பாமக தலைவர் ராமதாசு உள்பட பலரும் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.