சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதிபட தெரிவித்தார்.
தொழிலாளர் நலன், இந்து சமய அறநிலையங்கள், சுற்றுலா, பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் ஆகிய துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தின்போது பேசிய பாஜக உறுப்பினர் காந்தி,” விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதிகொடுக்க வேண்டும்”என்றார்.அப்போது குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பேட்டி சேகர்பாபு,”கொரோனா வைரஸ் ஆட்கொல்லி நோயாக இருப்பதால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு முதலமைச்சர் அனுமதி மறுத்திருக்கிறார். மேலும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை செயலாளரும் மூன்றாவது அலை தாக்கும் சூழல்இருப்பதால் தளர்வுகள் கூடாது என்றும் திருவிழாக்கள் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி தரக்கூடாது என்று கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார் எனவே தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது என்று உறுதிபடதெரிவித்தார்.
அர்ச்சகர் பயிற்சியில் விஸ்வ இந்து பரிசத்
தொடர்ந்து பேசிய காந்தி,”அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தை வரவேற்பதாகவும் இந்த அர்ச்சகர்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்புதான் பயிற்சி கொடுக்கிறது என்பதையும் தெரிவித்தார்.