உளுந்தூர்பேட்டை. செப். 17- விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் சிலை ஊர்வலத்தை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கத்தியால் குத்திய சாதி ஆதிக்க வெறியர் களை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றி யக் குழு சார்பில் செவ்வாயன்று (செப் 17) உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமை தாங்கி னார். மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்தி ரன், ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ஸ்டா லின்மணி, டி.எம். ஜெய்சங்கர், பி.சுப்பிரமணி யன், எம்.கே.பூவராகன், எம்.ஆறுமுகம், எம். செந்தில், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஜெ. ஜெயக்குமார், எஸ்.மணிகண்டன், கே.தங்க ராசு ஆகியோர் உரையாற்றினர்.