சென்னை, டிச. 11- தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பா லான மாவட்டங்களில் வறண்ட வானிலை நில வும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த வட கிழக்கு பருவமழை நிறைவடையும் தருவா யில் இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான சாத்தியம் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தென் தமிழகம் மற்றும் கட லோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.