tamilnadu

img

நவ.12 முதல் 16 வரை நீலகிரி செல்லவேண்டாம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை  

நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதிவரை நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.  

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இதனால் நவம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  இந்நிலையில் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.