வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
மேல்மருவத்தூர்,மே 19காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேல்மருவத்தூரை அடுத்த கேசவராயன்பேட்டை, லட்சுமி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மேல்மருவத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன் கடந்த மாதம் கோவில்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக பாலமுருகன்வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.ஞாயிறன்று காலை பாலமுருகன் குடும்பத்துடன் திரும்பி வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைத்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகொள்ளை போயிருந்தது.பாலமுருகன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை- பணத்தை சுருட்டி சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்என்று தெரிகிறது. இதுகுறித்து பாலமுருகன் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறு,சிறு நிறுவனங்களுக்கு பிணையமில்லா கடன்
சென்னை, மே 19- குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னெடுக்க துணைப்பிணையம் இல்லாத கடன்கள் வழங்கப்போவதாக க்ரெட்ரைட் அறிவித்துள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குள் ரூ.50கோடிக்கும் அதிகமான கடன் தொகையை வினியோகிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெட்ரைட் - ன் இணை நிறுவனரும், தலைமைச் செயல்அலுவலருமான நீரஜ் பன்சால் கூறினார்.அடுத்த 12 மாதங்களில் வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்களிலிருந்து கடன்களை ஏதுவாக்குவதன் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனப் பிரிவைச் சேர்ந்தசிட் ஃபண்டு சந்தாதாரர்களுக்கு சேவையாற்ற திட்டமிட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் உள்ள 10,000-க்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை இதன் மூலம் சென்றடைய கிரெட்ரைட் திட்டமிட்டுள்ளது என்றார். சென்னையில் மாயவரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களின் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நிராகரிக்கின்றன. ஆனால்சீட்டு நிறுவனங்களில் அவர்கள் முறையாக செலுத்திய கடந்த கால கடன் விவரங்களை ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் கடன் வழங்கப்படும் என்றும் பன்சால் கூறினார்.