tamilnadu

img

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான கால அவகாசம் நேற்று (ஜனவரி 18) முடிவடைய இருந்தது. ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் அதிகமான தகுதியான வாக்காளர்கள் பயனடையும் வகையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த கூடுதல் கால அவகாசத்தின் போது, 18 வயது நிரம்பிய தகுதியானவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அதேபோல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), தேர்தல் அலுவலகங்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.