tamilnadu

img

40 ஆண்டுகளில் உருவான வேலைவாய்ப்பு கடந்த 5 ஆண்டுகளில் பறிப்பு

ஈரோடு, ஏப். 5-


40 ஆண்டில் உருவான வேலைவாய்ப்பை கடந்த ஐந்து ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசை அகற்றுவதில் மத்திய தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டுகிறது என சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஈரோட்டில் நடந்த அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் சாடினார்.ஈரோட்டில், மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு ஆதரவாக, அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு செயல் வீரர்கள் கூட்டம் வியாழனன்று தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட சிஐடியு செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எஸ்ஆர்எம்யு கோட்ட செயலாளர் கோவிந்தன், ஈரோடு மாவட்ட எச்எம்எஸ் செயலாளர் சண்முகம், ஈரோடு மாவட்ட ஏஐடியுசி செயலாளர் வி.செல்வராஜன் உட்பட பலர் பேசினர்கள்.இதில்சிஐடியுமாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில்,மத்திய அரசின் தவறான தொழில் கொள்கையால், அன்னிய நேரடி முதலீடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிறிய நிறுவனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளங்கள், தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பணிகளில் கூட, தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்து, தனியாரை வேலைக்கு அமர்த்தி பணி செய்கிறது. அதில் தவறு நடந்தால், அதற்கு அந்நிறுவனம் பொறுப்பு ஏற்காது. இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.மத்திய, மாநில அரசுகளில் நிரந்தரமான வேலைவாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் போய்விட்டன. புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் உருவான வேலைவாய்ப்பு, கடந்த ஐந்தாண்டில் பறிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறைவதை தடுக்கவும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும், ஒன்றரை கோடிப்பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவேதான், மத்தியில் உள்ள அரசை அப்புறப்படுத்தும் பணியில், மத்திய தொழிற்சங்கங்கள் முனைப்பு காட்டும். இவ்வாறு அவர் பேசினார்.