மதுரை:
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்காது. தேசியக்கொடி தான் பறக்குமென தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும்” என எல்.முருகன் பேசியதாகக் கூறப்படுகிறதே? என்றகேள்விக்கு பதிலளித்த அமைச் சர், “ எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக் கொடி தான் பறக்கும்” என்றார்.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மூலம் 60 சதவீதம்குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் பூர்த்தியடையும். உயிர், உடைமை, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மண்டல அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழை நீரை சேமிக்க நீர் நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம்.மதுரை மாவட்டத்தில் 27 தாழ்வான பகுதிகள் உள்ளன. பருவமழையை எதிர்கொள்ள 31 நிலைக்குழுக்கள், 33 நிவாரணக்குழுக்கள் தயார் நிலையில்உள்ளன.நவீன கால விவசாயத்திற்கு ஏற்றது வேளாண் மசோதா என முதல்வரும், பிரதமரும் துறை சார்ந்த அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாய மசோதாவை எதிர்க்கட்சிகளுக்கு என்ன புரிதல் இருக்கிறது எனத்தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயத்தை மேம்படுத்தவிவசாய மசோதா உதவும்.