சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரி சட்டத்தினை மேலும் திருத்துவதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல் செய்தார்.
பெட்ரோலுக்கு, 34 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டதை மாற்றி, இனி, 15 சதவீதத்துடன் கூடுதலாக, 13 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் டீசலுக்கு, 25 சதவீத வரி மாற்றப்பட்டு, 11 சதவீதமும், 9.62 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிய திமுக உறுப்பினர்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியின்போது பெட்ரோல் விலை 50 பைசா உயர்த்திய போது இன்றைய ஆட்சியாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
அன்றைக்கு எதிர்த்து குரல் கொடுத்தவர்களின் இன்றைய ஆட்சியில் கடந்த 5 மாத காலத்தில் மட்டும் பெட்ரோல் ரூ.11, டீசல் 13 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.கடந்த 2011ஆம் ஆண்டு கச்சா எண்ணெய்யின் விலை ரூ.94.98 பைசாவாக இருந்தபோது பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 70 ரூபாய். தற்போது கச்சா எண்ணெய்யின் விலை 38 ரூபாயாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலையோ 85 ரூபாயாக உயர்ந்து இருப்பதையும் எடுத்துரைத்ததோடு இந்த விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கு விளக்கம் அளித்த வணிகவரி துறை அமைச்சர் கே.சி. வீரமணி, “கச்சா எண்ணெய்யின் விலை தற்போது குறைந்து இருப்பது உண்மைதான். கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் மாநில அரசையும், விதிகளையும் பாதுகாக்கவும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.