கடந்த ஜூன் 7 முதல் 12 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 78 காசுகளும், டீசல் விலைலிட்டருக்கு 6 ரூபாய் 01 காசும் உயர்ந்துள்ளன. சென்னையில் வியாழனன்று பெட்ரோல் 81 ரூபாய் 32 காசுகளுக்கும், டீசல் 74 ரூபாய் 23 காசுகளுக்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.