தமிழ்நாடு, புதுச்சேரியில் நீதிமன்றங்கள் இன்று மூடப்படுவதாக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, இன்று சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பதிவகம் (சென்னை மற்றும் மதுரை கிளைகளில் உள்ள முதன்மை அமர்வு) மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து துணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் அவற்றின் அலுவலகங்கள் இன்று (07.05.2025) மூடப்படும் என்று தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அந்தந்த நீதிமன்ற அமர்வுகளால் நாளை (08.05.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.