tamilnadu

img

தமிழ்நாட்டில் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்!

தமிழ்நாட்டில் 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

2025 ஆம் ஆண்டில் மூன்று மாதங்களில், தமிழ்நாட்டில் 1.24 லட்சம் நாய் கடித்த வழக்குகள் மற்றும் ரேபிஸ் நோயால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, 2024 ஆம் ஆண்டில், 4.8 லட்சம் கடித்த வழக்குகள் பதிவாகியுள்ளன. ரேபிஸ் நோயால் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.