tamilnadu

img

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு 

சென்னை
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 1985-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார்.  கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் இவரது பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கே.சண்முகத்தின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.