tamilnadu

img

மூன்று மாத சம்பளம் வழங்காத மீனாட்சி மருத்துவமனை

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனை ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாத விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி அறிவித்துள்ளது.மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் தலைவரின் இ.முத்துக்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

காஞ்சிபுரத்தில் செயல்படும் மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் 300 ஊழியர்களுக்கு அந்த நிர்வாகம் மார்ச் மாதம் சம்பளத்தில் 50 சதமும் ஏப்ரல் மே மாதங்களின் முழு சம்பளமும் இன்றைய தேதிவரை வழங்கப் படவில்லை.கொரோனா நோய் காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்த ஊழியர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தில் இக்காலத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.கோவிட் 19 ஊரடங்கு காலத் தில் பல நெருக்கடியான சூழலிலும் மருத்துவமனைக்கு வந்து பணிபுரிந்த இவர்களுக்கு சம்பளத்தை வழங்க இந்த நிர்வாகம் மறுப்பது ஈவு இரக்கமற்ற கொடும் செயலாகும்.

அந்த ஊழியர்கள் சங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்ற ஒரே காரணத் திற்காக சங்க நிர்வாகிகளை இடம்மாற்றம் செய்வது குறைந்தபட்ச கூலி சட்டத்துக்கும் குறைவாக சம்பளம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக எடுத்துவருகின்ற நிர்வாகம் தன் பழிவாங்கும் உணர்ச்சிகளை மேலும்கொட்டித் தீர்க்கும் வகையில்நெருக்கடியான காலத்தைப் பயன்படுத்தி சம்பளத்தையும் வழங்காமல் பட்டினி  போடுவதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்வாகத்தின் இந்த இந்தசெயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

1936 சம்பள வழங்கல் சட்டம் 1947 தொழிற்தகராறு சட்டம் இவைகளுக்கெல்லாம் எதிரான இந்த நடவடிக்கைகளை நிர்வாகம் துணிந்து செய்து வருகிறது. பேரிடர் நோய் அறிவிக்கப்பட்டு இருக்கிற இந்த காலகட்டத் தில் வேலையை மறுப்பதும் சம்பளத்தை கொடுக்காமல் இருப் பதும் இயற்கை நீதிக்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கும் எதிரானது என்பதை சிஐடியு தெரிவித்துக்கொள்கிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் தொழிலாளர் துறை துணை ஆணையர் அவர்களிடம்  05-06-2020 அன்று புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. உடனடியாக சம்பளம் வழங்கவில்லை என்றால் மருத்துவமனை முன்பு ஜூன் 8 ஆம் தேதி அன்று காலையில் தனிமனித இடைவெளியுடன் ஆர்ப் பாட்டம் நடைபெறும்.தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைத்திட  தமிழக அரசும் தொழிலாளர் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.