தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து நாளை 10 மணிக்கு மீண்டும் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து பட்ஜெட்டை நிறைவு செய்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24 ஆம் தேதிவரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மார்ச் 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
மார்ச் 24 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் உரையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.