நில அளவை அலுவலர்கள் 48 மணி நேரவேலை நிறுத்தம் தொடங்கியது
சென்னை, ஜூலை 15 - களப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க கோரி நில அளவை அலுவலர்கள் 48 மணி நேரை வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்களன்று (ஜூலை 15) தொடங்கினர். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் உருவாக்க வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண் டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் நில அளவர் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்க கூடாது, அலுவலர்களுக்கு நீதி மன்ற பயிற்சி வழங்க வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி களுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு இந்த வேலை நிறுத்தத்தை செய்கிறது. இதனையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.ரவி தலைமை தாங்கினார். ஒன்றிப்பின் பொதுச் செயலா ளர் அண்ணா குபேரன், அரசு சங்க மாவட்டத் தலைவர்கள் வி.சிவக்குமார் (வட சென்னை), அ.கோபிநாதன் (தென் சென்னை), தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்பாஸ், ஒன்றிப்பின் மாவட்டச் செயலாளர் சி.பிரியா உள்ளிட்டோர் பேசினர்.