சென்னை:
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு விசாரணைக்காக சென்னை வந்துள்ள அவரது குடும்பத்தினர் தடயவியல் ஆய்வகத்திற்குச் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். மாணவியின் செல்போனில் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படும் 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் புகார் அளித்த பாத்திமாவின் தந்தையிடமும் போலீசார் சில விவரங்களை கேட்டிருந்தனர். பாத்திமாவின் தங்கை ஆயிஷாவிடமும் விசாரணை நடத்த போலீசார்முயற்சித்து வந்தனர்.இந்த நிலையில் புதன்கிழமையன்று சென்னைக்கு வந்த பாத்திமாவின் தந்தைலத்தீப், சகோதரி ஆயிஷா டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு சென்றனர். அங்கு பாத்திமாவின் செல்போன் தடயவியல் ஆய்வு விவரம் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாத்திமாவின் செல்போன் கோட்டூர்புரம் போலீசார் வசம் இருந்ததாகவும் அதிலிருந்த தகவலைபாத்திமாவின் தந்தை பெற்றது எப்படி என்று
விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.